some-beauty-tips-to-smooth-out-hard-feet(சொரசொரப்பான பாதங்களை மிருதுவாக்கும் சில அழகு குறிப்புகள்...!!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

some-beauty-tips-to-smooth-out-hard-feet(சொரசொரப்பான பாதங்களை மிருதுவாக்கும் சில அழகு குறிப்புகள்...!!)

feet

சொரசொரப்பான பாதங்களை மிருதுவாக்கும் சில அழகு குறிப்புகள்...!!


சிலருக்கு கருமை படர்ந்த கணுக்கால் வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்சனையாகவும் காணப்படும்.

பாதம் உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின் 4 சொட்டு எலுமிச்சைச்சாறை கலந்து தூங்கச் செல்லும்போது நகம் விரல்கள் பாதம் முழுவதும் தடவி  காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கவும்.பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும். குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன்  வெண்ணெயைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.
 
வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை  அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.
 
சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால் பாதம் கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.
 
நான்கு துளி விளக்கெண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.

No comments:

Post a Comment