some-medical-tips-to-help-reduce-obesity(உடல் பருமனை குறைக்க உதவும் சில வைத்திய குறிப்புகள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 16 August 2021

some-medical-tips-to-help-reduce-obesity(உடல் பருமனை குறைக்க உதவும் சில வைத்திய குறிப்புகள் !!)

pineapple

உடல் பருமனை குறைக்க உதவும் சில வைத்திய குறிப்புகள் !!


அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸாகவும் குடித்து வர முக அழகு பொலிவு  பெருகும்.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி  ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌ உட‌ல் எடை குறையும்.
 
தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.
 
நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2  வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.
 
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

No comments:

Post a Comment