some-tips-for-irregular-menstrual-problem ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனைக்கு சில குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

some-tips-for-irregular-menstrual-problem ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனைக்கு சில குறிப்புகள் !!

uterus Problem

ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனைக்கு சில குறிப்புகள் !!


குழந்தைப்பருவத்திலிருந்தே சீரற்ற உணவு பழக்கம் ஆரம்பித்துவிடுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது இல்லை.


இளம் வயதில்  பால் பொருட்கள், மில்க் சாக்லேட் சாப்பிடுவதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. 
 
துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும். பிற்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கியக்  காரணம்.
 
தைராய்ட் உள்ளிட்ட ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, கருப்பையின் சுவரில் வரும் அடினோமையோசிஸ் பிரச்சனைகள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனை  வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 
 
சித்த மருத்துவத்தின்படி, பெண்களின் உடலில் பித்தம் சரியாக இருக்க வேண்டும். பித்த அளவில் மாறுபாடோ, கபம் கூடுதலாக இருந்தாலோ, மாதவிலக்கு தள்ளிப்போகும். மேலும், உடலில் இருக்க வேண்டிய வளர்சிதை மாற்ற வேகம் சரியான அளவில் இல்லை என்றாலும், மாதவிலக்கில் பிரச்சனை ஏற்படும். எதனால்  இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.
 
உடலில் கபம் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அசோக மரத்தின் (வீட்டு வாசலில் உயரமாக வளர்ந்திருக்கும் நெட்டிலிங்க மரத்தை, சிலர் அசோக  மரம் என்று தவறாக நினைப்பார்கள்) பட்டையை எடுத்து கஷாயம் தயாரித்துப் பருகுவதாலும் ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தலாம். 
 
மருத்துவரின் பரிந்துரைப்படி சோற்றுக்கற்றாழை லேகியம் எடுத்துக்கொண்டாலும் இப்பிரச்சனை சீராகும். அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வெந்தயம்  சாப்பிடுவதும் நல்லது. அதைவிட, ‘ஆடாதொடை கற்கம்’ அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment