some-tips-to-enhance-the-colour-of-the-face முகத்தின் நிறத்தை அதிகரிக்க சில டிப்ஸ் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

some-tips-to-enhance-the-colour-of-the-face முகத்தின் நிறத்தை அதிகரிக்க சில டிப்ஸ் !!

Beauty Tips

முகத்தின் நிறத்தை அதிகரிக்க சில டிப்ஸ் !!


பால் பவுடரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.


இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.பின் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
 
எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
 
துளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.
 
மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். பாதாம் எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊறவைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

No comments:

Post a Comment