some-tips-to-help-get-rid-of-dark-circles-around-the-eye கண்களை சுற்றியுள்ள கருமையை போக்க உதவும் சில குறிப்புகள்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

some-tips-to-help-get-rid-of-dark-circles-around-the-eye கண்களை சுற்றியுள்ள கருமையை போக்க உதவும் சில குறிப்புகள்...!!

Eye Dark Circles

கண்களை சுற்றியுள்ள கருமையை போக்க உதவும் சில குறிப்புகள்...!!

கற்றாழை: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.


பின் அந்த  கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம்.

20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.
 
பாதாம் எண்ணெய்: தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து,  மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை  நீங்களே காண்பீர்கள்.
 
எலுமிச்சை: எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சு உருண்டையில்  நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். 
 
இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.




No comments:

Post a Comment