star-fruit-is-high-in-fiber அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஸ்டார் பழம் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

star-fruit-is-high-in-fiber அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஸ்டார் பழம் !!

Star fruit

அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஸ்டார் பழம் !!

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். 
 

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர்வழி பரவும் நோய்கள் குணமாகும். 

ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம். அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது.
 
இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. 
 
ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். 

No comments:

Post a Comment