the-amazing-medicinal-properties-of-green-peas- (பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

the-amazing-medicinal-properties-of-green-peas- (பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!)

பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் 


பச்சை பட்டாணியில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது.மேலும்  நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகளவில் நிறைந்துள்ளன.

பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட்,தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க அதிகம் பயன்படுகிறது.
 
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
 
பச்சை பட்டாணியை உணவோடு சேர்த்து கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் இதில் உள்ள நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
 
பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் பி3 இதய நோயை உண்டாக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதய நோயில் இருந்து காக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
 
பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment