ஜீரணக்கோளாறுகளை போக்கும் சீரக பொடியின் அற்புத மருத்துவ குணங்கள் !!
உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து என்பது மிகவும் அவசியம். இரும்பு சத்து குறைபாட்டை சீரக நீர் சரி செய்யும். மாதவிடாய் கால வலியை குறைக்கும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம்.
சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை அதிகரித்து இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழித்து சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சீராக நீரைக் தொடர்ந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சீரகம், ஏலக்காய் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் கால் ஸ்பூன் அளவ
ு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
சீரகப் பொடியை வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து
அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.
அடிக்கடி ஜீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள்.
வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும்.
No comments:
Post a Comment