நுரையீரலில் உள்ள கோழையை வெளியேற்றி அற்புத நிவாரணம் தரும் திப்பிலி...!!
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும். நுரையீரல் பாதைத் தொற்றுகளை அழிக்கும் சக்தி திப்பிலிக்கு உண்டு.
பல்வேறு நோய் போக்கும் மிளகைவிட அதிகக் காரமும் வெப்பத்தன்மையும்கொண்ட இந்தத் திப்பிலிய
ை கைப்பக்குவ மருந்தாக வீட்டில் பல வகையில் பயன்படுத்த இயலும். இளவறுப்பாய் வறுத்துப் பொடித்த திப்பிலிப் பொடியை, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, வெற்றிலைச்சாறும் தேனும் சேர்த்துக்கொடுக்க, நுரையீரலிலிருந்து வெளியேற மறுக்கும் கோழையை வெளியேற்றி இருமலைப் போக்கும்.
கபம் நெஞ்சில் கட்டிக்கொண்ட, மலச்சிக்கலும் உள்ள குழந்தைகள் அல்லது முதியோருக்கு, மலத்தை இளக்கி வெளியேற்றி கபத்தைக் குறைப்பதுதான்
ஆஸ்துமா நோய்கான தீர்வைத்தரும். இதற்கு, திப்பிலி பொடியையும், கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து உருட்டி இரவில் கொடுக்கலாம்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
No comments:
Post a Comment