tips-to-remove-gray-hair-and-darken-hair-(இளநரையை நீக்கி தலைமுடியை கருப்பாக்கும் குறிப்புகள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

tips-to-remove-gray-hair-and-darken-hair-(இளநரையை நீக்கி தலைமுடியை கருப்பாக்கும் குறிப்புகள் !!)

Gray Hair

இளநரையை நீக்கி தலைமுடியை கருப்பாக்கும் குறிப்புகள் !!


2:3 என்ற விகிதத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் சேர்த்து கலக்கி தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்யவும். பின்பு அரை மணி நேரம் களித்து முடியை அலசவும். இவ்வாறு செய்து வந்தால் இளநரை குணமாகும்.

தேவையான அளவு நீரை நன்கு கொதிக்கவைத்து அதில் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு மருதாணி இலையை அரைத்து இந்த நீரில் சேர்த்து குளிரவைக்கவும். சில மணி நேரம் இந்த கலவை நன்கு ஊற வேண்டும். பின்பு இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் களைத்து முடியை அலசவும்.
 
8 துண்டு நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து வேகவைத்து பின்பு அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் சேர்த்து கிரவிட்டு இறக்கவும். பின்பு அது நன்கு சூடு ஆரிய பிறகு இரவு நேரத்தில் உச்சந்தலையில் சிறிது எண்ணெய் அதிகமாகவே தடவலாம். பின்பு காலை எழுந்தவுடன் சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.
 
வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
 
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்

No comments:

Post a Comment