tomatoes-that-get-rid-of-excess-oil-and-shine-on-the-faceமுகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்கி பளபளப்பை தரும் தக்காளி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

tomatoes-that-get-rid-of-excess-oil-and-shine-on-the-faceமுகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்கி பளபளப்பை தரும் தக்காளி !!

tomato

 முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்கி பளபளப்பை தரும் தக்காளி !!


தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். தக்காளி ஜுஸ்வுடன் வீட்டில் உள்ள பொருட்களை  பயன்படுத்தி எளிய முறையில் முகத்திற்கு பேஷியல் செய்வது பற்றி பார்ப்போம்.

உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன், தக்காளி விழுது - அரை டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும்  முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். 
 
தக்காளி சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம்  சூரியனாகப் பிரகாசிக்கும்.
 
எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் தக்காளி ஜூஸுடன் வெள்ளரிக்காய் மற்றும் தேன் கலந்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை மிக்சியில் அரைத்து ஜுஸாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூச  வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும். தக்காளி ஜுஸ், வெள்ளரிக்காயும் முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி, முகத்தை பளபளக்கச்செய்யும்.
 
உலர்ந்த சருமம் கொண்டவர்கள் தக்காளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜுஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி  ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 

No comments:

Post a Comment