want-to-make-delicious-ceylon-barota-in-an-easy-way பற்களுக்கு இயற்கை மூலிகை பற்பொடிகளை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 29 August 2021

want-to-make-delicious-ceylon-barota-in-an-easy-way பற்களுக்கு இயற்கை மூலிகை பற்பொடிகளை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...?

Herbal Toothpaste

பற்களுக்கு இயற்கை மூலிகை பற்பொடிகளை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...?

நாம் பற்களை பராமரிக்காமல் விட்டால், பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தக்கடிவு, வாய்நாற்றம், பற்களில் கரை படிதல், பயோரியா போன்ற பல் சிதைவு நோய்கள்  உண்டாகின்றன.

பல்லுக்கு பாதுகாப்புத் தருபவைகளில் காலங்காலமாக ஆல், வேல், நாயுருவி, வேம்பு, கடுக்காய் போன்ற மூலிகைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தற்போது கணக்கிலடங்கா பற்பசைகள் புழக்கத்தில் உள்ளன. இவைகளெல்லாம் பற்களுக்கு புதிய தூய்மையான உணர்வை மட்டுமே ஊட்டுகின்றன.
 
பற்கள் பளிச்சென்றிருக்கவும் பற்கள் நீண்டநாள் உறுதியோடு இருக்கவும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பற்பசை, பற்பொடி, உணவுமுறை மற்றும் பராமரிப்பு  முறைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
 
சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம்.
 
லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை  குணமாகும்.
 
திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது. கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு  வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும்.
 
கருவக்குச்சிகளை ஒடித்து, அப்படியே பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. சர்க்கரை நோயையும் குணப்படுத்தும்  ஆற்றல்கொண்டது.
 
வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும். அதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமல்  காக்கும்.
 
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.


No comments:

Post a Comment