want-to-make-the-tastiest-onion-bonda- சுவை மிகுந்த வெங்காய போண்டா செய்ய வேண்டுமா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

want-to-make-the-tastiest-onion-bonda- சுவை மிகுந்த வெங்காய போண்டா செய்ய வேண்டுமா...?

Onion Bonda

சுவை மிகுந்த வெங்காய போண்டா செய்ய வேண்டுமா...?


தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 
சோம்பு  - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
 
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மைதா மாவு உப்பு வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
 
மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை நன்கு காயவைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான வெங்காய போண்டா தயார்.


No comments:

Post a Comment