what-are-the-benefits-of-adding-more-small-onions-in-the-diet உணவில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

what-are-the-benefits-of-adding-more-small-onions-in-the-diet உணவில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா...?

Small onions

உணவில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா...?


சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல்   நீங்கும்.வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெய்யில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம்  சாப்பிடுவது நல்லது.
 
மூலநோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன்  கிடைக்கும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச் சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
 
வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
 
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய்  குறையும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

No comments:

Post a Comment