பூண்டில் உள்ள அற்புத சத்துக்களும் அதன் பயன்களும் !!
பூண்டை முறையாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். உண்மையில் தினமும் பூண்டு சாப்பிடும்போது நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் மிகுந்த பலம் பெறுகிறது.
அந்தவகையில் பூண்டை எப்படி சாப்பிட வேண்டும் எதை சாப்பிட வேண்டும் யாரெல்லாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் அதன் காரத்தன்மை தெரியாமல் இருக்க எப்படி சாப்பிட வேண்டும்.
முதலில் சளி பிரச்சனை பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான் அடிக்கடி சளிப்பிடிக்கும் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும் தொற்றுக்களையும் நெருங்கவிடாமல் செய்யக்கூடியது. அதாவது பூண்டில் உள்ள அலிசின் ஒரு நேச்சுரல் ஆன்ட்டிபயாட்டிக் இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து நுரையீரலை காக்க உதவுகிறது
மேலும் சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் எனவே ஆஸ்துமா சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் சளி இருமலால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் இருந்து மீண்டு வரலாம். அது மட்டுமல்ல மலேரியா காசநோய் யானைக்கால் நோய் மற்றும் பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகள் எதிராக செயல்படக்கூடியது.
அடுத்து வயிற்றுப்புழுக்கள் பொதுவாக வயிற்றில் உள்ள புழுக்கள் நாம் சாப்பிடும் உணவை இந்த புழுக்கள் சாப்பிட்டுவிட்டு தன்னை வளர்த்துக் கொண்டு நம்மை நோயாளியாக மாற்றி விடும். எனவே தினமும் ஒரு பச்சை பூண்டு பல்லை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி புழுக்களும் வெளியேறிவிடும்.
No comments:
Post a Comment