what-are-the-benefits-of-keeping-maruthani-ofteN அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 28 August 2021

what-are-the-benefits-of-keeping-maruthani-ofteN அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்...?

Maruthani

அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்...?


மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது. 
 
மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம். கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.
 
கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டை தணிக்கிறது. மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும்.
 
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர, மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம்  ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
 
சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து  அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
 
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து  தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment