what-are-the-foods-that-help-maintain-the-health-of-the-hair முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவுகள் என்ன...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

what-are-the-foods-that-help-maintain-the-health-of-the-hair முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவுகள் என்ன...?

Hair Growth

முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவுகள் என்ன...?


உணவில் புரதத்தை சேர்ப்பது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். எனவே புரத சத்து நிறைந்துள்ள முட்டை, கோழி, பால், சீஸ், கொட்டைகள், தயிர் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கற்றாழை சாறில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது இறந்த சரும செல்கள் மற்றும் மயிர்க்கால்களை சரிசெய்யக்கூடும், இதன் விளைவாக முடி வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். எனவே கற்றாழை சாறு குடித்து வந்தால் முடி வளர்ச்சி அடையும்.பார்லியில் இரும்பு மற்றும் தாமிரம் நிறைந்துள்ளன, அவை சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டும் மற்றும் மயிர்க்கால்களை வலிமையாக்கும்.
 
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ஆகியவை முட்டையில் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் பயோட்டின் என்கிற வைட்டமின் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும்.
 
கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் தலை முடிக்கும் கண்களுக்கும் நன்மை தரும். கேரட்டில் உள்ள அதிக அளவு பீட்டாகரோட்டின் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் தலையில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது.
 
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை வலிமைபடுத்தும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும். நெல்லிக்காய் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும். இளநரை தோன்றுவதை தடுக்கும். இதனை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

No comments:

Post a Comment