what-are-the-health-benefits-of-poppy-seeds-கசகசாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

what-are-the-health-benefits-of-poppy-seeds-கசகசாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

Kasa Kasa

கசகசாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள். இது வெறும் சமையல் பொருளாக மட்டும் இல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை தரும் மருந்து பொருளாகவும் விளங்குகிறது.

கசகசா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் ஒரு நல்ல ஈரப்பதமாக்கியாக செயல்பட்டு, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை பெற உதவுகிறது.

இரவில் நிம்மதியான தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் கசகசா விதைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். சகசா விதைகளை கொண்டு தேநீர் தயாரித்து இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
 
கசகசா விதைகளில் உள்ள ஜிங்க் சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். இது உடலின் நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
 
கசகசாவில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்தும்.
 
மூளைக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் கசகசாவில் உள்ளன. இது நரம்பு செல்களை தூண்டி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
 
கசகசா உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
 
கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படாமல் தடுத்து சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.


No comments:

Post a Comment