what-foods-help-increase-hemoglobin-levels- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் என்ன...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

what-foods-help-increase-hemoglobin-levels- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் என்ன...?

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் என்ன...?


பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் வகையைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஃபோலிக் ஆசிட் குறைபாடு காரணமாக இரத்த அணுக்கள் குறைகின்றன. வாழைப்பழம், தக்காளி, முளைப்பயிறு, பீட்ரூட் போன்றவற்றில் ஃபோலிக் ஆசிட் இடம் பெற்றிருக்கும்.

வைட்டமின் பி, சி சத்து அதிகம் உள்ள குப்பைமேனி இலையின் தேநீர் பருக வேண்டும். சுடு தண்ணீரில், இரண்டு ஸ்பூன் அளவிலான குப்பைமேனி இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும். தினம், இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.உடலில், இரும்புச் சத்து குறைபாடினால், ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும். கீரை வகைகள், பூசணி, பீட்ரூட், சிக்கன் கல்லீரல், பேர்ச்சம்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
 
உடலுக்கு தேவையன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆப்பிள், உடல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. தினம், ஒரு ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.
 
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

1-2 பீட்ரூட்களை அதன் தோலுடன் மைக்ரோ ஓவனில் அல்லது அடுப்பில் போட்டு சமைக்கவும். அதனை ஆற வைத்து பின் தோலை உரிக்கவும் மீடியம் அளவிலான 1 பீட்ரூட், 3 காரட்கள் மற்றும் 1/2 சீனிக் கிழங்கை கொண்டு ஆரோக்கியமான ஜூஸை தயார் செய்யலாம். தினமும் அதனை ஒரு முறை குடிக்கவும்.
 
இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 டீஸ்பூன் சர்க்கரைப்பாகுவை 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் நாற்றும் 1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள். இதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.
 
தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

No comments:

Post a Comment