what-results-are-regularly-consuming-jaggery தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

what-results-are-regularly-consuming-jaggery தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்?

 Jaggery

தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்?


வெல்லம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் வெயில் நாட்களில் பானகம் என்ற பெயரில் வெல்லம் கலந்த நீர் குடிப்பார்கள்.


கல்லீரலை பாதுகாக்கும்: கல்லீரலின் வேலை உடலின் பிரதானமானது. அதுதான் உடலை சுத்தப்படுத்துதல், உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது. எனவே அந்த கல்லீரலை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்துக்கொள்ள வெல்லம் உதவுகிறது.

 

பொட்டாசியம், எல்க்ட்ரோலைட்டுகளும் வெல்லத்தில் இருப்பதால் இளநீர், ஸ்போட்ர்ஸ் ட்ரிங்குகளுக்கு இணையான ஆற்றலை உடலுக்கு அளிக்கும். உடல்  சுறுசுறுப்புக்காகவும் வெல்ல நீர் அருந்த வேண்டும்.

 

வெல்லம் இரும்பு சத்து நிறைந்ததால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

 

இரத்தத்தையும் சுத்திகரிப்புச் செய்வதால் நோய் பாதிப்புகளும் வராது. மேலும் இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அமிலத்தின் அளவை பராமரித்து  இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: இரும்பு சத்து நிறைந்த வெல்லம் துத்தநாகம் மற்றும் செலினியம் அதோடு நச்சு நீக்கியையும் கொண்டுள்ளதால் உடலை எந்த  நோயும் தீண்டாது.

 

வெல்லம் சாப்பிடுவதால் எண்டோர்ஃபின்கள் வெளியேறும். இது சுரப்பதால் வலிகள் ஏற்படுமாயின் அதைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும்  முடக்கு வாதம், மூட்டு வலி, வீக்கம் கொண்டோர்கள் தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். 


No comments:

Post a Comment