women-s-hair-grow-well பெண்களின் கூந்தல் நன்றாக வளர - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

women-s-hair-grow-well பெண்களின் கூந்தல் நன்றாக வளர

hair





பெண்களின் கூந்தல் நன்றாக வளர




\முடி வேகமாக வளர தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாகவும் நீண்டும் வளரும்.




மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

முடி வளர:


தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.


கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

பொடுகை தவிர்க்க:


வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது.


வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

முடி உதிர்வதை தடுக்க:


வெந்தயம் மற்றும் குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


நரைமுடி கருப்பாக:


நரைமுடி கருப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்.

எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.


முடி பளபளப்பாக:


அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.


5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.

 


No comments:

Post a Comment