அமில சோதனை பற்றி தெரியுமா?
உங்கள் உடலில் உள்ள பிஎச் அளவை ஆல்கலைன் தன்மை உணவு மூலம் மாற்றுவது மேலும் ஆரோக்கியத்தை பெற உதவுமா? ஃபாயே ரெமிடியாஸ் கொஞ்சம் ரசாயன பாடம் நடத்துகிறார்.
கட்டுடல் என்றே குறிப்பிடப்படும் சூப்பர் மாடல் எல்லி மேக்பர்சன் 52 வயதில் தனது அழகான உடல்வாகிற்கு ஆல்கலைன் தன்மையே காரணம் என்கிறார். தனது உடல் ஆல்கலைன் தன்மை கொண்டதாகவே இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் எப்போதும் பி.எச் அளவை
அளப்பதற்கான சாதனத்தை தன்னுடன் வைத்திருக்கும் அளவுக்கு இந்த முறையை தீவிரமாக பின்பற்றுகிறார்.
இந்த போக்கிற்கு இந்திய பாரம்பரிய அறிவியலும் சான்றளிக்கிறது என்கிறார் காஸ்மடிக் மருத்துவர் டாக்டர்.ஜமுனா பாய். “வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் பழக்கம் நமக்கு இருந்தது. வேப்பங்குச்சிக்கு கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உண்டு. இது பல் ஆரோக்கியத்தை பாதுகாத்ததுடன், குடல் பகுதியையும் தூய்மையாக்கியது. பல் துலக்கியவுடன், வாயை தண்ணீரால் கொப்பளித்து மஞ்சள் நிற திரவத்தை வெளியேற்றுவது அமிலத்தன்மையை உணர்த்துகிறது. தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து மாறி சாதாரணமாக மாறும் வரை அவர்கள் வாயை கொப்பளிப்பதுண்டு.’’
Femina
பி.எச் அளவு
இந்த விகிதத்தின் முக்கியத்துவத்தை தில்லியின் பி.எஸ்.ஆர்.ஐ மருத்துவமனையில் டயட்டிக்ஸ் பொறுப்பு வகிக்கும் டாக்டர்.தேப்ஜனி பானர்ஜி விளக்குகிறார்: “உடலின் திசுக்கள், திரவம் ஆகியவற்றின் அமில -ஆல்கலைன் விகிதத்தின் அளவுதான் பிஎச். இந்த சமன் மாறும் போது, நோய்களின் பாதிப்பு ஏற்படலாம் என்பதோடு, வயோதிக தன்மை,
தாதுக்கள் குறைவு, களைப்பு, புண்கள், உறுப்பு பாதிப்பு உண்டாகலாம்.”
அமிலத்தன்மை பி.எச் அளவில் 1 முதல் 14 ஆக கணக்கிடப்படுகிறது. பி.எச் அளவு 7 க்கு மேல் இருந்தால் உடல் ஆல்கலைன் தன்மை கொண்டது. இது 7க்கும் குறைவாக இருந்தால் அமிலத்தன்மை கொண்டது.
பி.எச் அளவு 7.1&7.4 ஆக இருந்தால் உங்கள் உடல் அமிலத்தன்மையை விட சற்றே ஆல்கலைன் தன்மை கொண்டிருக்கிறது என பொருள். “உங்கள் உடலில் ஆண்டி ஆக்சிடெண்ட்கள், வயோதிக தன்மைக்கு எதிரான ஊட்டச்சத்துகள், முக்கிய தாதுக்கள், வைட்டமின்கள் அதிகம் உள்ளன என்று பொருள். இவை உங்களை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்” என்கிறார் டாக்டர் பய்.
ஆல்கலைன் உணவு, நோய்க்கான அமில/ஆல்கலைன் கோட்பாட்டை மையமாகக் கொண்டது. “நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணமாகும் போது, ஆஷ் என குறிப்பிடப்படும் அமிலத்தன்மை கொண்ட உணவுக் கழிவாக மிஞ்சுகிறது. அதிக அளவில் ஆஷ் தங்குவது நோய் பாதிப்பை அதிகமாக்கும் என உணவு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” என்கிறார் டாக்டர் பானர்ஜி.
உடலால் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் நோய் பாதிப்புகள் உண்டாகும் நிலை அசிடியாசிஸ் என குறிப்பிடப்படுகிறது. “அமிலத்தன்மை கொண்ட உடல், எலும்புகளில் இருந்து கால்சியம் அல்லது மாங்கனீசை எடுத்துக்கொண்டு சமநிலை பெற முயலும். இது உங்களை ஆஸ்டியோபோரோசிசுக்கு இலக்காகி, சருமத்தை
மங்கலாக்கி, தலைமுடி, நகங்களை வலுவிழக்கச்செய்யும்” என்கிறார் ஊட்டச்சத்து வல்லுனர் கஞ்சன் பட்வர்தன்.
மறுபக்கம்
இந்த உணவு வகைக்கு அதிக ஆதரவாளர்கள் இருந்தாலும் மற்ற உணவு பழக்கம் போலவே, இதுவும் முழுமையானதல்ல என்பதோடு கவனம் தேவை என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். பி.எச் உணவுப் பழக்கத்தை முற்றிலுமாக நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். நாம் எதுவும் செய்யாமலே இந்த சமனை பெறும் வகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இது தவிர, எந்த உணவு அமிலத்தன்மை கொண்டது, எவை ஆல்கலைன் தன்மை கொண்டவை என்பதும் குழப்பமானது.
மிதமான தன்மையே எப்போதும் சிறந்தது என்கிறார் டாக்டர் பானர்ஜி. “பி.எச் அளவு ஆல்கலைன் தன்மை கொண்டதாக இருக்க ஆல்கலைன் உணவு மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. பழங்கள் போன்ற சம உணவை உட்கொள்ளலாம். உணவால் உங்கள் ரத்தத்தில் உள்ள பிஎச் அளவை மாற்றி, உடல் நோய்களை எதிர்கொள்ளும் விதத்தை மாற்ற முடியுமா என்பது விவாதத்திற்கு உரியதாகவே இருக்கிறது. எல்லாவற்றையும் விட நல்ல உணவுகளை எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமில்லா உணவை குறைப்பது தான் சிறந்த வழி”.
அடிப்படையில், நொறுக்குத்தீனிகளை குறைத்து காய்கறிகள், பழங்கள் கொண்ட உணவை நாடுவது நல்லது. இந்த விவாதம் உங்கள் உணவு பழக்கத்தை ஆய்வு செய்ய வைத்து அது எப்படி உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என சிந்திக்க தூண்டுகிறது. இது மிகவும் நல்லது தான்.
Femina
தட்டில் காய்கறிகள்
ஆல்கலைன் தன்மை கொண்ட உணவை உட்கொள்வது உடலில் நச்சு நீக்கத்தை மேம்படுத்தி, உடல் நலனை அதிகமாக்குவதாகக் கருதப்படுகிறது. உடலை ஆல்கலைன் கொண்டதாக்குவது மூலம் புற்றுநோய் போன்ற நோய் பரவுவதை தடுக்க முடிவதோடு வயோதிக தன்மையையும் சமாளிக்கலாம் என்கிறார் டாக்டர் பய்.
பழங்கள், காய்கறிகள், தாவர உணவு, அதிக தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. மன அழுத்தம், புகைபிடித்தல், காபி, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, இறைச்சி தவிர்க்கப்பட வேண்டும். “நல்ல பசுமையான சாறுகள் குளோரோபைல், ஆன்டி&ஆக்சிடென்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து அதிகம் பெற்றுள்ளன என்கிறார் ஹோலிஸ்டிக் ஹெல்த் வல்லுனரான மிக்கி மேத்தா. எனவே டாக்டர் பய் படிப்படியான மாற்றங்களை பரிந்துரைக்கிறார்.
பொறித்த உணவுகளுக்கு பதிலாக கிரில் செய்த, வேக வைத்த, ஆவியில் வெந்ததை நாடவும்.
பால் உணவை குறைக்கவும். பால் அமிலத்தை உண்டாக்குகிறது. எனவே அதற்கு ஈடாக காய்கறிகள் போன்ற ஆல்க¬ன் தன்மை கொண்ட உணவை நாடவும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பச்சை இறைச்சியை தவிர்க்கவும்.
டிரான்ஸ், ஹைட்ரோஜெனேட்டட் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளிட்ட எல்லா கெட்ட கொழுப்புகளையும் தவிர்த்து மோனோ சாச்சுரேட்டட், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு கொண்ட வால்நெட்கள், பாதாம், சோளம், ஆலிவ், சூரியகாந்திகளை உட்கொள்ளவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை பொருட்கள் கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.
மதுவை கட்டுப்படுத்தவும். ஒயினும் இதில் அடங்கும்.
ஆன்டி&ஆக்சிடென்ட் நிறைந்த பப்பாளி, மாம்பழம், கேரட், பரங்கி, தக்காளி, எலுமிச்சை, ப்ராகோலி, பீட்ரூட் போன்ற பல நிற பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடவும். காய்கறி சாறு நிறைய அருந்தவும்.
“இந்த உணவுகள் வெப்ப மண்டல பருவநிலையில் சிறப்பாக செயல்படுகிறது” என்கிறார் உணவு கட்டுப்பாடு வல்லுனரான எஃப்.ஐ.எம்.எஸ் டயட் கிளினிக்கின் த்வணி ஷா. “எனினும் இது பெரும்பாலும் தானிய வகைகள் சார்ந்த நமது பாரம்பரிய உணவில் இருந்து மாறுபடுகிறது.எனினும் பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதாக கிடைப்பதால் இது சாத்தியமே. பழச்சாறு மற்றும் சாலெட்களுக்கு பழகி கொள்ள வேண்டும்”.
இந்த உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். உடற்பயிற்சியைப் பொருத்த வரை பிராணவாயுவை உற்பத்தி செய்து, உணவை ஆல்கலைன் தன்மை உள்ளதாக்கும் கார்டியோவை பரிந்துரைக்கிறார் டாக்டர் த்வணி. யோகா, தியானம் மற்றும் வெளிப்புற பயிற்சி மிகவும் ஏற்றது என்கிறார் அவர்.
No comments:
Post a Comment