aloe-benefits-the-skin கற்றாழையின் பயன்கள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 17 September 2021

aloe-benefits-the-skin கற்றாழையின் பயன்கள்

Femina

கற்றாழையின் பயன்கள்

உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திருகுமான அருமருந்தாக கற்றாழை விளங்குவதை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். இந்த அருமையான பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். கற்றாழையை பயன்படுத்தக்கூடிய மூன்று வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும நல முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி? என அறிந்து கொள்ளுங்கள்.

செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்
கற்றாழை இலை இன்றை கத்திரித்து, அதன் முள்களை நீக்கிவிட்டு அதன் சாற்றுப்பகுதியை முகத்தின் பக்கவாட்டில் பூசிக்கொள்ளவும். செடியில் இருந்து கத்தியை கொண்டும் கொஞ்சம் சாற்றை அகற்றி பயன்படுத்தலாம். இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.

நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்
எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.

உலர் சருமத்திற்கான கற்றாழை
உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

No comments:

Post a Comment