உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுக்காய் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 2 September 2021

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுக்காய் !!

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடுக்காய் !!


கடுக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். கடுக்காயின் கொட்டையில் நஞ்சு இருப்பதால் அதை பயன்படுத்தக்கூடாது.

கடுக்காய் பொடியைக்கொண்டு பல் துலக்கினால் ஈறு வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு நீங்கும். மேலும் பற்கள் வலுப்பெறும்.
 
தண்ணீரில் கடுக்காய்ப் பொடியை 2 கிராம் கலந்து மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும் கை கால் எரிச்சல் நீங்கும்.
 
கடுக்காய் பொடி, சுக்குத்தூள், திப்பிலித்தூள் இம்மூன்றையும் சமஅளவு எடுத்து கலந்து காலை, மாலை அரை தேக்கரண்டி சாப்பிட வேண்டும். இதனை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
 
தினமும் இரவு படுக்கும் முன்பு ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய் பொடி சாப்பிட்டு வந்தால் நோயில்லா வாழ்க்கையை வாழலாம். கடுக்காய், தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெரும்.
 
கடுக்காய் சாப்பிடுவதால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து கழிவுகளும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
 
கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, வாய்ப்புண், தொண்டை புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு அற்புத மருந்துதான் இந்த கடுக்காய்.


No comments:

Post a Comment