தூக்கமின்மையை தீர்க்கும் உணவு பழக்கம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 5 September 2021

தூக்கமின்மையை தீர்க்கும் உணவு பழக்கம்

Femina

தூக்கமின்மையை தீர்க்கும் உணவு பழக்கம்


தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. அவை குறித்து பார்ப்போம்.

தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்த ை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.

தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும். சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.


No comments:

Post a Comment