குழந்தைகளின் பார்வை திறன் வளர கொடுக்க வேண்டிய உணவுகள்
உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால், அனேக கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, உங்கள் குழந்தைகள்
பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான பார்வையோடு இருப்பார்கள். நீங்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைக்குச் சத்தான உணவைத் தரவும், இங்கே சில உணவுகளின் பட்டியல் உங்களுக்காக,
1. நாவல்பழம் மற்றும் திராட்சைப்பழம்
நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும்,இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும்.ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது.மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.
2. மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப்
பெரிதும் உதவும்.கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.குறிப்பாக சால்மன்,டுனா,மேக்கிரல்,ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.
3. கீரை வகைகள்
பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.
4. ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள்
மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும்.தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால்
கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
5. சூரிய காந்தி விதைகள்
இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன.இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன.வாங்கி பலன் அடையலாம்.
No comments:
Post a Comment