கோவைக்காய் மசாலாபாத் உணவு தயாரிக்கலாம் வாங்க!
கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல குழந்தைகள்,
பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கப்,
கோவைக்காய் – 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் – ஒரு மேசைக்கரண்டி,
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – அரை தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
வறுத்த முந்திரி – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தலா ஒரு மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
No comments:
Post a Comment