can-guava-leaf-water-control-blood-sugar-levels ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா கொய்யா இலை நீர்...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 3 September 2021

can-guava-leaf-water-control-blood-sugar-levels ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா கொய்யா இலை நீர்...?

Guava lef

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா கொய்யா இலை நீர்..



கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும்  மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.





 
கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்  மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. 
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.கொய்யா இலையின் சாறு  எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறைவதை காணலாம்.
 
செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும். உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.
 
தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்த ு அலச வேண்டும். கொய்யா இலையின்  சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊறவைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment