chitharathai-to-drive-away-dry-cough வறட்டு இருமலை வராமல் விரட்டி அடிக்கும் சித்தரத்தை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 3 September 2021

chitharathai-to-drive-away-dry-cough வறட்டு இருமலை வராமல் விரட்டி அடிக்கும் சித்தரத்தை !!

Chitharathai

வறட்டு இருமலை வராமல் விரட்டி அடிக்கும் சித்தரத்தை !!


சித்தரத்தை காரச்சுவை கொண்டது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது இது. அதனால் தொண்டையை நன்றாக பாதுகாக்கவேண்டும். அதற்கு சித்தரத்தை உதவுகிறது. 

* இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது  தோன்றும். இருமல் நின்றுவிடும்.
 
* குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த  பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.
 
* கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல  மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்.
 
* சித்தரத்தை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.
 
* சிறிய இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
 
* சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள்  இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம்.
 
* வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை  நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும்.

No comments:

Post a Comment