coconut-oil-or-olive-oil தேங்காய் எண்ணெயா? ஆலிவ் எண்ணெயா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 4 September 2021

coconut-oil-or-olive-oil தேங்காய் எண்ணெயா? ஆலிவ் எண்ணெயா?


femina

தேங்காய் எண்ணெயா? ஆலிவ் எண்ணெயா?


ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டுமே, சமையலில் சுவையைப் பொருத்தவரை தனித்துவமான மதிப்புகளைப் பெற்றிருக்கின்றன. இதைப் பற்றி மேலும் விளக்குகிறார் உப்னீத் பன்சாரே

ஆலிவ் ஆயில்


நல்ல அம்சங்கள்
- எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது சுத்தமான வடிவத்தில் பெறப்பட்டுள்ள எண்ணெய். அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டான பாலிஃபீனால் அதிக அளவில் இருக்கிறது.
- ஆலிவ் ஆயில், உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பை ஆலிவ் ஆயில் கணிசமாக குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

கலோரி கணக்கு
1 தேக்கரண்டி = 40 கலோரிகள்

கெட்ட அம்சங்கள்
- இதில் கலோரிகள் அதிகம்; ஒரு பவுண்ட் (சுமார் 0.453 கிகி) எண்ணெயில் சுமார் 4,000 கலோரிகள் உள்ளன. இதை மிக அதிகமாக உட்கொண்டால் உடலில் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை ஏற்படும்.
- ஆலிவ் ஆயிலுடன் காய்கறிகள், பழங்களை யும் நீங்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய்


நல்ல அம்சங்கள்
- தேங்காய் எண்ணெய்களில் 66% மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட்ஸ் (எம்.சி.எஃப்.ஏ) அடங்கியுள்ளது. இவை வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்க்கும் தன்மை கொண்டவை.
-  எம்.சி.எஃப்.ஏ செரிமானத்திற்கு நல்லது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடும். இதனால், எடை குறைவு ஏற்படக் கூடும். மேலும் இது உடலின் ஆற்றல் அளவுகளையும் அதிகரிக்கிறது.
- அதிக அளவிலான தேங்காயை சாப்பிடும் மக்களே மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கலோரி கணக்கு
1 தேக்கரண்டி = 33 கலோரிகள்

கெட்ட அம்சங்கள்
- இதயத்திற்கு நன்மையளிக்கக் கூடிய கொழுப்புகள் சில (மைரிஸ்டிக்) இருந்தாலும், அதிக அளவிலான தீங்கு விளைவிக்கும் கொழுப்பு (லாரிக்) அமிலங்களும் உள்ளன.
- இவை இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்குமாம்.

நியூட்ரீஷனிஸ்டின் கருத்து
“தேங்காய் எண்ணெயைப் போல ஆலிவ் ஆயில் உடலில் முழுமையாக உட்கிரகிக்கப்படுவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெயில் ட்ரான்ஸ் -ஃபேட் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகம். ஆனால் ஆலிவ் ஆயிலில் அதிகமாக உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதை ஒரு ஆரோக்கியமான தேர்வாக மாற்றுகின்றன” என்கிறார் மும்பையைச் சேர்ந்த நியூட்ரிஷனிஸ்ட் அஞ்சலி

No comments:

Post a Comment