இல்லத்தரசிகளுக்கான சமையல் டிப்ஸ்!
* வெங்காயத்தை நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்த பிறகு நறுக்கினால் கண்கள் எரிச்சல் ஏற்படாது.
* மீன் பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, அந்த வாசனை வெளியே செல்லாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவத்தியை
ஏற்றி வைத்துவிட்டு மீன்களை பொறித்தால் வாசனை நம் வீட்டை தாண்டாது.
* வாழைத்தண்டை நறுக்கி மோரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும்.
* பூண்டை தட்டிப்போட்டு சமைப்பதை விட தோல் உரித்து காற்றாட விட்டு சமைப்பதே சிறந்தது .
* முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்வது நல்லது .
* தோசை வராமல் போனால் உடனடியாக தோசைக் கல்லின் மீது உப்புத்தூளைக் கொட்டி முழுமையாக தடவி பின்னர் உப்பை தள்ளிவிட்டு தோசை மாவை
ஊற்றினால் தோசை அழகாக வரும்.
* கெட்டுப்போன உணவு என்று தெரிந்தால் அதை உணவு கிடைக்காதவருக்குகூட கொடுக்க வேண்டாம் அதை நீங்களும் சாப்பிட வேண்டாம். உணவுகளை அதிகநாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
* உணவு அதிகமாக இருந்தால் அது நன்றாக இருக்கும்போதே அருகில் இருக்கக்கூடியவர்களுக்கு கொடுத்துவிடலாம், கெட்டுபோனால் யாருக்கும் பயனில்லை.
No comments:
Post a Comment