do-you-know-what-are-the-actions-that-should-not-be-done-immediately-after-eating-food(உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத செயல்கள் என்ன தெரியுமா...?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 30 September 2021

do-you-know-what-are-the-actions-that-should-not-be-done-immediately-after-eating-food(உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத செயல்கள் என்ன தெரியுமா...?)

food -Benefits

உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத செயல்கள் என்ன தெரியுமா...?

வயிறு நிறைய உணவு உண்ட பின்னர் பெரும்பாலானோர் செய்யும் செயல் தூங்குவது தான். இன்னும் சிலரை எடுத்துக் கொண்டால், உணவு செரிப்பதற்காக நடைப்பழக்கம் மேற்கொள்வார்கள். 

சாதாரண வேளையில் சிகரெட் பிடிப்பதை விட, உணவு உண்ட உடனேயே சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட்டை பிடித்ததற்கு சமமாகும். அவ்வளவு கொடிய விளைவுகளை உணவு உண்ட உடனேயே சிகரெட்டைப் பிடித்தால் சந்திக்க நேரிடும். 
 
உணவு உண்ட உடனேயே குளிக்கக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் வயிறு நிறைய இருக்கும் போது, குளிப்பதால், செரிமான மண்டலம் பலவீனமாகி, செரிமான செயல்முறையில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உடல்நிலை சரியில்லாமல் போகும்.
 
நடனமாடுவது ஆரோக்கியமான ஓர் உடற்பயிற்சியாக இருந்தாலும், உணவு உண்ட உடனேயே நடனமாடினால், உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச முடியாமல் போய்விடும். 
 
எப்போதுமே உணவு உண்ட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். 
 
வயிறு நிறைய உணவை உண்டவுடன் பழங்களை உட்கொள்ளக் கூடாது. எப்போதும் பழங்களை உணவு உண்பதற்கு முன்பு உட்கொண்டால் தான், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் புரோட்டீன்களை முழுமையாகப் பெற முடியும்.
 
உணவு உண்ட உடன் மிகவும் குளிர்ச்சியான நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். ஏனென்றால், குளிர்ச்சியான நீரைக் குடித்தால், உணவு முறையாக செரிமானமாகாது. அதுவே சுடுநீர் குடித்தால், உணவு எளிதில் செரிமானமாவதோடு, உணவில் உள்ள சத்துக்களும் எளிமையாக உடலால் உறிஞ்சப்படும்.
 
உணவை உட்கொண்டு 1 மணிநேரத்திற்கு பின் தூக்கத்தை மேற்கொள்வதால் எவ்வித தவறும் இல்லை. ஆனால் உணவு உண்ட உடனேயே படுத்து தூங்கினால், உணவை செரிக்க சுரக்கப்படும் செரிமான அமிலமானது வயிற்றில் இருந்து உணவுக்குழாய் வழியே மேலே ஏறி, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

No comments:

Post a Comment