குழந்தைகளுக்கு அவசியமான சுண்ணம்புசத்து உணவுகள்
உங்களது குழந்தையின் உணவு அதன் வளர்ச்சியில் முக்கியமாக பங்காற்றுகிறது. அந்த உணவின் ஒரு முக்கிய பகுதி சுண்ணாம்புச்சத்தாகும். சுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவை முக்கியமாக பங்காற்றுவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். நமது உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்தில் 99% எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படுகின்றன. சுண்ணாம்புச்சத்து தசை செயல்பாடு, நரம்புகளின் வழியாக தகவல் பரிமாற்றம் மற்றும் ஹார்மோன் சுரப்பு ஆகியவற்றுக்கும் அத்தியாவசியமான நுண் ஊட்டச்சத்தாகும்.
1 சுண்ணாம்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வது உங்களது குழந்தைகளுக்கு தேவையான எலும்பு அடர்த்தி பெறுவதை பாதித்து, அவர்களது எலும்புகளை பலகீனமாக்கி அவர்களது வாழ்வில் பிற்காலத்தில் எலும்புப் புரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். 2 ஆகையால், உங்களது குழந்தையின் உணவில் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
பால் மற்றும் பால் பொருட்கள்3
பால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாக திகழ்கிறது. 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு உணவில் அதிக சுண்ணாம்புச் சத்துள்ளவற்றில் பால் முதல் நிலையில் உள்ளது. தொடர்ந்து பால் உட்கொள்வது கனிமச்சத்தை அதிகரிப்பதுடன் எலும்பில் கனிம அடர்த்தியையும் அதிகரிக்கிறது. பால், பாலாடைக்கட்டி, மற்றும் தயிர் ஆகியவற்றை சாப்பிடுவது ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவதுடன், இரத்த அழுத்தத்தை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை
அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
சிறுதானியங்கள்
அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாக தானியங்களைக் காட்டிலும் சிறுதானியங்கள் மேம்பட்டவையாக கருதப்படுகின்றன. கம்பு, வரகு, தினை, பனி வரகு, குதிரைவாளி போன்ற பல்வேறு வகையான சிறு தானியங்கள் உள்ளன. சிறுதானியங்களில் அதிகமான சுண்ணாம்புச் சத்து உள்ளது. 100 கி தானியத்தில் 300 முதல் 350 மிகி சுண்ணாம்புச்சத்துள்ள இவற்றை உங்களது குழந்தையின் உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கொட்டைகள்
ஒருவேளை உங்களது குழந்தைக்கு பால் மற்றும் இதர பால் பொருட்கள் பிடிக்கவில்லை என்றால், மரத்திலிருந்து கிடைக்கும் கொட்டை வகைகளில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளதால் அவை தலைசிறந்த மாற்றாக இருக்கும். குழந்தைகளின் உணவில் சேர்க்கப்பட வேண்டிய கொட்டைகளில் பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும். 100 கி பாதாமில் 248 மிகி சுண்ணாம்புச்சத்து உள்ளது,
முந்திரியில் இது 100 கிராமுக்கு 37 மிகி உள்ளது, மேலும் அக்ரூட் பருப்பில் 100 கிராமுக்கு 98 மிகி உள்ளது.
கொண்டைக்கடலை
ஆரம்பகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் பயிரிடப்பட்ட கொண்டைக்கடலை பல்வேறு வகையான ஆரோக்கியப் பலன்களைத் தருகின்றன. கொண்டைக்கடலையில் சுண்ணாம்புச்சத்து, புரதங்கள், மாவுச்சத்து, மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்ததுள்ளது. 6 கொண்டைக்கடலையில் காணப்படும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பேட், மற்றும் துத்தநாகம் போன்றவை எலும்பு கட்டமைப்பையும் பலத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 100 கி கொண்டைக்கடலையில் 49 மிகி சுண்ணாம்புச் சத்துள்ளது.
இறைச்சி
ஒருவேளை உங்களது குழந்தை அசைவ உணவு சாப்பிடுவதாக இருந்தால், அதன் எலும்புகளை பலப்படுத்துவதற்கு அதன் உணவில் போதுமான சுண்ணாம்புச் சத்தை சேர்ப்பதற்கு இதைவிட சிறந்த வழி எது இருக்கப் போகிறது? பல்வேறு வகையான இறைச்சியில் பல்வேறு அளவுகளில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, வாட்டப்பட்ட சாலமோன் மீன், இறாள், குளத்துமீன், கடல்மீன் வகைகள் மற்றும் பல்வேறு வகையான இறைச்சியில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சார்டீன் (எண்ணெய் வடிவில் கேன்களில் அடைக்கப்பட்டு வருகிறது) 100 கி அளவில் 324 மிகி சுண்ணாம்புச்சத்து உள்ளது, அதேவேளை 100கி சாலமோன் மீனில் இது 181 மிகி உள்ளது.
வாழ்வின் பல்வேறு நிலைகளில் இது அத்தியாவசியமான ஊட்டச்சத்தாக இருந்தபோதும், குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது ஏனெனில் அவர்களது எலும்புகள் விரைவாக வளர்ச்சியடைகிறது. ஒரு கிளாஸ் பால் வழங்கினால் போதும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது போதுமானது இல்லை. 10 ஆகையால், ஹார்லிக்ஸ் போன்ற இணை ஊட்டச்சத்துப் பொருளை சேர்ப்பது உங்களது குழந்தைகளுக்குத் தேவையான மற்றும் அவர்கள் உணவின் மூலமாக பெறுகின்ற சுண்ணாம்புச் சத்துக்கு இடையில் உள்ள இடைவெளியை சரிசெய்ய உதவி செய்யும்.
No comments:
Post a Comment