கிரீன் டீயின் நன்மைகள்
சீனா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கிரீன் டீ, அதன் நற்பலன்களுக்காகப் புகழ்பெற்றது. குறிப்பாக இதய நலன், அல்சைமர் நோய் மற்றும் ஆர்த்ரைட்டீஸ் போன்ற நோய்களில் கிரீன் டீயின் பங்கு அதிகம். மேலும், கிரீன் டீ எடையைக் குறைக்கும் பலன்களுக்கு வரவேற்பைப் பற்றுள்ளது. ஆக்ஸிடைஸ் செய் யப்படாத தேயிலைகளில் இருந்து செய்யப்படும், கிரீன் டீ, பிளாக் டீயுடன் ஒப்பிடும்போது, ஏராளமான குணமளிக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.
கிரீன் டீ மற்றும் அதன் பல்வேறு நற்பலன்களைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
கிரீன் டீ என்றால் என்ன?
கிரீன் டீ மற்றும் பிளாக் டீ இரண்டுமே ஒரே தாவர குடும்பமான கமில்லியா சைனென்சிஸ் என்பதில் இருந்து உருவாக்கப்படுபவையே; இந்தத் தாவரத்தை செயலாக்கும் வழிமுறைகளில்தான் அது கிரீன் அல்லது பிளாக் டீயாக மாறுகிறது.-கமில்லியா சைனென்சிஸ் என்பது சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தேயிலை வகை. இது புதர் தாவரமாக, வறண்ட ஆனால் குளிர் வானிலை நிலவும் பகுதிகளில் வளரக்கூடியது. இந்த வகை தேயிலைகள் மிகவும் குளிர்ந்த வெப்பநிலைகளை நன்கு தாங்கிக் கொள்ளும் திறனுடையது.
-கமில்லியா சைனென்சிஸ் அஸ்ஸாமிக்கா என்பது பெரிய இலையைக் கொண்ட தேயிலை வகை. பெரும்பாலும் பிளாக் டீ உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது அஸ்ஸாமில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது,
வெப்பமான, ஈரப்பதமுள்ள வானிலை நிலவும் பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
கிரீன் டீ செயலாக்கும் நடைமுறைகள் என்பது தேயிலைகளைப் பறித்து, அவற்றை உடனடியாக பாத்திரத்தில் வறுத்து (சீன வழிமுறை) அல்லது நீராவியில் வேகவைத்து (ஜப்பானிய வழிமுறை) அதன் பிறகு உடனடியாக உலர்த்துவதன் மூலம் ஆக்சிடைஸ் ஆவது தடுக்கப்படுகிறது. இதுவே பிளாக் டீ செயாலக்கும் முறையில், பறிக்கப்பட்ட தேயிலைகள் முழுமையாக ஆக்சிடைஸ் ஆகும் வரை காத்திருந்து, அதன் பிறகு வெப்பத்தால் சீராக்கப்பட்டு, உலர்த்தப்படும். தேயிலைகளின் செல் சுவர்களுடன் ஆக்சிஜன் வாயுவின் செயல்பாடுதான் ஆக்சிடைசேஷன் என்றழைக்கப்படுகிறது, இதனால் தேயிலைகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்துக்கு மாறுகின்றன. அவற்றின் சுவையும் மாற்றமடைகிறது.
உதவிக்குறிப்பு: கிரீன் டீ மற்றும் பிளாக் டீ ஆகியவை ஒரே தாவர வகையில் இருந்து உருவாக்கப்படுகின்றன!
கிரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்துகள் யாவை?
கிரீன் டீயில் கேட்சின்ஸ் என்பது அடங்கியுள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸி டென்ட் பண்புகள் உள்ளன கிரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் என்பவை, ஒரு வகை பாலிஃபீனால்கள், இவை ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் கொண்ட உட்பொருட்கள். கிரீன் டீயில் உள்ள கேட்சின்களானவ எபிகேட்சின், எபிகாலோக்கேட்சின் மற்றும் கேலேட் வழிபொருட்கள்.
இன்னும் ஒருவகை பாலிஃபீனால் ஆனால் குவர்செட்டின் என்பதும் கிரீன் டீயில் உள்ளது, மேலும் லைனோலெயிக் அமிலம், அஜினெனின், கஃபீன் மற்றும் தியோப்ரோமைன் மற்றும் தியோஃபைலிலின் போன்ற மற்ற மெத்தலை சாந்தைன்ஸ் உள்ளன. அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள், கார்போஹைட்ரேட்கள் குறைந்த அளவுகளிலும். இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாதுபொருட்களும் உள்ளன. வேக வைத்து வடிக்கப்பட்ட கிரீன் டீயில் இனிப்பு சேர்க்காதபோது, கலோரிகளோ, காழுப்போ முற்றிலும் இருக்காது.
உதவிக்குறிப்பு: கிரீன் டீயில் உடல்நலத்திற்கு நன்மை செய்யும் ஏராளாமான வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன.
No comments:
Post a Comment