hennas-medicare-uses(மருதாணியின் மருத்துவ பயன்கள்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 26 September 2021

hennas-medicare-uses(மருதாணியின் மருத்துவ பயன்கள்!)

femina

மருதாணியின் மருத்துவ பயன்கள்!


மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி இலைகள் ஈட்டி வடிவமானவை. நான்கு கோணங்களுடன் எதிர் எதிராக 2-3 செமீ நீளத்தில் அமைந்திருக்கும்.

மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment