herbs-and-benefits-to-help-control-sugar-levels- சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகளும் பயன்களும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 2 September 2021

herbs-and-benefits-to-help-control-sugar-levels- சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகளும் பயன்களும் !!

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகளும் பயன்களும் !!


நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.


பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், சீக்கம், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.

நெல்லிக்காய் - ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு பருகவேண்டும். இது கனையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர இன்சுலின் சுரப்பு சீராகும்.
 
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயம் பயன்படுகிறது. ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என  நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவை.
 
ஆவாரம் பூ - 150 மி.லி. நீரில், 11 கிராம் அன்று பூத்த ஆவாரம் பூவைப் போட்டு மூடிவைத்து நீர் 100 மி.லி. ஆக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.
 
ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆவாரம் பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
 
பாகற்காய் - இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், க்ளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
 
வல்லாரை - வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். 

No comments:

Post a Comment