வாயு தொல்லையிலிருந்து விடுபட நினைப்பவர்களா? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்!
நெஞ்சு எரிச்சல்.. ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக தலை சுற்றுவது சிலருக்கு இருக்கலாம். இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கோ, கர்ப்பிணிகளுக்கோ, வீட்டு பெரியவர்களுக்கோ இருக்கும். இந்த வாயு தொல்லையை எப்படி விரட்டி அடிப்பது. 3 வயது குழந்தைகள் தொடர்ந்து ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். வாயு தொல்லையால் சில குழந்தைகளும் வயிறு வலிக்கிறது என அழுவார்கள்
வாயு பிரச்னையை விரட்ட என்ன செய்யலாம்?
காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம். காலை 11, மாலை 4 போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது. காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும். இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம். அவல், தேங்காய்ப் பால், கைக்குத்தல் அரிசி, சிறுதானிய பொங்கல், வெண் பொங்கல் சாம்பார், இட்லி சாம்பார், நவதானிய கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்கு இட்லி, ஸ்டீம் தோசை,
ஆப்பம் தேங்காய்ப்பால், புட்டு கொண்டைக்கடலை, வாழைப்பழம், வெல்லம் இப்படி கொடுக்கலாம். பெரியவர்கள் பொங்கல், சப்பாத்தி பருப்பு சப்ஜி, ஒரு கப் பழத்துண்டுகள், கேழ்வரகு உணவுகள், சிவப்பரிசி அவல், பப்பாளி சாலட் போன்ற 2-3 விதமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆம், காலை உணவு ஒரு ராஜாவை போல சாப்பிடுங்கள். அதுதான் ஆரோக்கியம்.
femina
என்னென்ன விதிமுறைகள்?
அதிக பசி வந்த பின்னும் சாப்பிடாமல் இருக்க கூடாது. காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம். மிளகாய்க்கு பதிலாக மிளகு தூள் எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல. சிலர் சொல்வார்கள் இதெல்லாம் ஒரு காரமா, நான் எவ்ளோ காரம் சாப்பிடுவேன் தெரியுமா? இது பெருமை அல்லஞ் உங்களது குடல் பாதித்துகொண்டிருக்கிறது எனத் தெரியாமல், நீங்கள் சொல்வது அறியாமையின் வெளிப்பஅடு. வேலை காரணமாகவோ மற்ற காரணத்துக்காகவோ காலை, மதியம், இரவு உணவைத் தவிர்க்க வேண்டாம். அடிக்கடி தலைவலி, வயிறு வலி, சளி என நீங்களே அடிக்கடி மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். புகை பிடிக்கும் நபர்கள் அருகில் செல்ல கூடாது. எப்போதும் டென்ஷன், படபடப்பு, பயம், அவசரம் போன்றவை இருந்துகொண்டே இருந்தால் நிச்சயம் செரிமான பிரச்னை வரும். வாயு பிரச்னையும் வரும். மனதை எப்போது அமைதியாக, சீராக வைத்திருக்கப் பழகுங்கள். இதையும் படிக்க: மூக்கடைப்பை சரிசெய்ய கூடிய எளிமையான வீட்டு வைத்திய டிப்ஸ்
சில வீட்டு வைத்திய முறைகள் மற்றும் தீர்வுகள்
தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது. இட்லிக்கு கறுப்பு உளுந்து - தொலி நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைக்க பாருங்கள். இட்லிக்கு பிரண்டை துவையல் அரைத்து சாப்பிடலாம். இட்லிக்கு புதினா சட்னி சாப்பிடுவதும் வாயு தொல்லையை நீக்கும். வாரம் ஒரு முறை மட்டும் துவரம் பருப்பு சாம்பார், அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள். வாரத்துக்கு 3-4 முறை துவரம் பருப்பு சாம்பார் சாப்பிட கூடாது. பாசிப்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு கூட்டு, மசியல் எனச் சாப்பிடுங்கள். அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெருங்காயம், சீரகம் இடம் பெற வேண்டியது அவசியம். வாரம் ஒரு முறை கொண்டைக்கடலை குழம்பு, குர்மா எனச் செய்து சாப்பிடலாம். இதில் மிளகு, சீரகம் அவசியம் சேர்க்கவும். பாசிப்பருப்பு கீரை அல்லது காய்கறிகளின் மசியல் நல்லது. ரசம் உணவைக் கட்டாயமாக்குங்கள். சாதத்தில் போட்டு ரசத்தை சாப்பிடாவிட்டாலும் ஒரு டம்ளர் ரசமாவது குடிக்கலாம். ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் இருப்பதால் வாயு தொல்லை நீங்கும். தக்காளி ரசம், பருப்பு ரசம், பைன் ஆப்பிள் ரசம், தக்காளி ரசம், தூதுவளை ரசம், வெற்றிலை ரசம்,
வேப்பப்பூ ரசம் என நிறைய வகை ரசம் உள்ளன. தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் நல்லது. ஆனால், அதைக் காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும்.இரவில் 3 இட்லி, 3 தோசை, புட்டு, ஆப்பம், இடியாப்பம் என லேசான உணவுகளை சாப்பிடலாம். மாலை 6-7 மணியளவில் 1-2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்?
பஜ்ஜி, போண்டா சமோசா, மசாலா வடை உருளைக்கிழங்கு காராமணி முட்டைக்கோஸ் கொத்தவரை துரித உணவுகள் பீசா, பர்கர் பிஸ்கெட் பலாப்பழம் மாம்பழம்
No comments:
Post a Comment