கைவைத்தியம்
சளி இருமல் ஏற்பட்டால், பயம் தேவையில்லை. இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாமே.
சுக்கு தேநீர்
இளம் சூடு பதத்தில் உள்ள நீரில் 2 தேக் கரண்டி சுக்கு தூளுடன் 1/4 தேக் கரண்டி
எலுமிச்சை சாறு, 1 தேக் கரண்டி தேன் கலந்து பருகவும்.
இஞ்சி சாறு
2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 தேக் கரண்டி தேன் கலந்து தினமும் 4 வேளை எடுத்துக்கொண்டால். நெஞ்சு சளியை உடனே தீரும்.
எலுமிச்சை & தேன்
1 தேக் கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் 5 வேளை
குடிக்கலாம்.
சீரகப் பொடி
சீரகத்தை நன்கு பொடி செய்து தேனுடன் தினமும் 2 வேளை சாப்பிட்ட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.
தேங்காய் எண்ணை
தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தடவ நெஞ்சு சளியைப் போகும்.
No comments:
Post a Comment