how-is-butter-used-for-skin-health(சரும ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பயன்படுகிறது வெண்ணெய்...?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 30 September 2021

how-is-butter-used-for-skin-health(சரும ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பயன்படுகிறது வெண்ணெய்...?)

Butter

சரும ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பயன்படுகிறது வெண்ணெய்...?

2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.


10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
 
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
 
வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணெய்யை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.
 
சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும்.

30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

No comments:

Post a Comment