keezhanelli-plays-an-important-role-in-curing-various-diseases பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் கீழாநெல்லி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 2 September 2021

keezhanelli-plays-an-important-role-in-curing-various-diseases பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் கீழாநெல்லி !!

பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் கீழாநெல்லி !!



கீழாநெல்லி பல்வேறு நோய்கள் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது.

கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் பிரச்சனை சிலருக்கு இருக்கும். அப்படியானவர்கள் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் உடனே பல் கூச்சம் போய்விடும்.
 
கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தாமதமாக வருதல், உதிரச்சிக்கல் போன்றவை தீரும்.
 
கீழாநெல்லி இலையுடன் மாதுளம்பழம், நாவல் கொழுந்து இலை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதிய ை குணமாகும்.
 
கீழாநெல்லிவேர், நல்லெண்ணெய், கருஞ்சீரகம், சீரகம் இவை தலா 10 கிராம் அளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடிகட்டி தலைக்கு குளிக்கலாம். இதனால் உச்சி குளிர்ந்து மன அழுத்தத்தை குறைக்கும்.
 
மஞ்சள் காமாலை, சீறுநீரக நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிறு சம்பந்தமான நோய்கள், காய்ச்சல், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், புரை, வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.
 
கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
 
நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடனே சரியாகி விடும்.


No comments:

Post a Comment