ladyfinger-helps-to-dissolve-bad-fat-in-the-body(உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வெண்டைக்காய் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 30 September 2021

ladyfinger-helps-to-dissolve-bad-fat-in-the-body(உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வெண்டைக்காய் !!)

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் வெண்டைக்காய் !!

வெண்டைக்காயில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. 

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
 
வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும். வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்சனைகளைத் தவிர்க்கக் கூடியது. 
 
வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்சனைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். 
 
வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. 
 
வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.

No comments:

Post a Comment