அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்!
உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வருகிறார்கள். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”.
அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். அதிமதுரம் பயன்கள் சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள்.
அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.
அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.
சிறுநீரகங்கள் உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது.
No comments:
Post a Comment