அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்
அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.
இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும்.இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து
வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.
No comments:
Post a Comment