medicare-uses-of-willow(வில்வம் காயின் மருத்துவ பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 26 September 2021

medicare-uses-of-willow(வில்வம் காயின் மருத்துவ பயன்கள்)

femina

வில்வம் காயின் மருத்துவ பயன்கள்


நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்(ஸ்வீறீஸ்ணீனீ தீமீஸீமீயீவீts வீஸீ tணீனீவீறீ). மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கையின் மருத்துவம்:
நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் மிக விரிவகா எடுத்துரைக்கிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

கண் பிரச்சனைகள்:
கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வயிற்று வலி:
நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பழக்க காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

முடி உதிர்தல்:
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்க்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும்
முடி உதிர்தல் நீங்கும்.

கரும்புள்ளி நீங்கும்:
நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க நாம் அப்பள வழிமுறைகளை பின்பற்றுவோம். அதற்க்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.இதற்க்கு வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

No comments:

Post a Comment