medicinal-uses-of-amakura-tuber(அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 22 September 2021

medicinal-uses-of-amakura-tuber(அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள்!)

femina

அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள்!


மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கரா கிழங்கு.

உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.


பயன்கள்
1. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.

2. அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.

3. அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.

4. கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

5. அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

No comments:

Post a Comment