ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்
அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி ஆம்பல். இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெள்ளை நிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும் வழங்கப் பெறும். இது குளம் குட்டைகளில் வளர்கின்றன. இதன் இலை, பூ, விதை,
கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பெண்களில் முகத்தை தாமரைக்கும், அல்லிக்கும் ஒப்பாக குறிப்பிடுகின்றனர் சங்ககால புலவர்கள். அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.
அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும்.
எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்
. தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.
No comments:
Post a Comment