medicinal-uses-of-arutava-herb(அருவதா மூலிகையின் மருத்துவ பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 26 September 2021

medicinal-uses-of-arutava-herb(அருவதா மூலிகையின் மருத்துவ பயன்கள்)

femina

அருவதா மூலிகையின் மருத்துவ பயன்கள்


அருவதா மூலிகை, மலைப் பிரதேசங்களில் செழிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 - 5 அங்குல நீளமுள்ளவை. இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.

மருத்துவப் பயன்கள் -:
இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது. இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும், ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எரிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.

No comments:

Post a Comment