medicinal-uses-of-jack-fruit(பச்சைப் பட்டாணியின் மருத்துவப் பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 25 September 2021

medicinal-uses-of-jack-fruit(பச்சைப் பட்டாணியின் மருத்துவப் பயன்கள்)

femina

பச்சைப் பட்டாணியின் மருத்துவப் பயன்கள்


வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.


நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

No comments:

Post a Comment