புளியின் மருத்துவப் பயன்கள்
அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான
அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் கட்டை மரச் சாமான்கள் செய்ய பயன்படுகிறது, இதன் மென்மையான இலைகள் சமையலுக்கு சுவை கூட்டுகிறது.
புளியின் பயன்கள்
புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது.
புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது. ஜுரத்திற்கு - பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை இட்டு குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் உண்பதால் இது உடம்பில் உள்ள மலங்களை வெளிக்கொணர்கிறது.
No comments:
Post a Comment