கோதுமைப் புல்லின் மருத்துவப் பயன்கள்
கோதுமைப்புல் (Wheatgrass) மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், இதில் உள்ளன. இது சாதாரணமாக ரொட்டிக் கோதுமை என்று அழைக்கப்படுகிறது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது. கோதுமைப்புல் பொடி/வீட் கிராஸ் பவுடர் (Wheatgrass Powder) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இந்த பொடி மிகுந்த சத்து நிறைந்தது என்று கூறப்படுவதற்குக்
காரணம், மேலே கூறப்பட்டுள்ள சத்துக்களுடன், இதில் குளோரோஃபில் (chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது தான். கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன்(gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும். கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன. இப்போது அந்த கோதுமைப்புல் பொடியின் நன்மைகளைப் பார்ப்போம்.
செரிமானத்தில் உதவுகிறது
கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. சிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது கோதுமைப்புல் பொடியில் நிறைந்துள்ள ஏராளமான குளோரோஃபில்கள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதிகமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதால், இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், அதன் மூலம் உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. எனவே வீட் கிராஸ் ஜூஸானது இரத்தத்தில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் உற்பத்தி செய்வதில் மிகவும் உதவுகிறது.
எடைக் குறைப்பில் உதவுகிறது
கோதுமைப்புல் பவுடரை ஜூஸ்களிலும், பழரசங்களிலும் சேர்க்கலாம் என்பதால், இதனை மற்ற உணவுப் பொருட்களில், வாசனைப் பொருளாகவும், மாற்று உணவாகவும் சேர்க்க முடியும். மேலும் இது உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கிறது. உடற்பயிற்சி நேரங்களில், நீண்ட நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
மேலும் தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், செரிமானமின்மையையும் தடுக்கிறது
இரத்தத்தில் பிஎச் அளவை சமப்படுத்துகிறது
கோதுமைப்புல் பொடியில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய ஜீபி அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.
நச்சு நீக்கும் தன்மை
கோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஈரலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும் குடலை சுத்தப்படுத்தி, கார்ஸினோஜன்களிலிருந்து (carcinogens) காக்கிறது.
No comments:
Post a Comment